உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

இணையவழி வகுப்புகள் வெளிநாடுகளில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் நோக்குடன் நூலகம் ( www.noolagam.com ) இணையதளத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றது. இணையவழி தமிழ் வகுப்புகள் ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

பாராட்டுப் புள்ளிகள்:

  • பாராட்டுப் புள்ளிகள் என்பது மாணவர்கள் வகுப்பில் பங்கேற்பதற்கு ஏற்ப அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கப் புள்ளிகளாகும்.
  • ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் பங்கேற்கும் ஒவ்வொரு வகுப்பிற்கும் 10 புள்ளிகள் வழங்கப்படும். வீட்டுப் பாடங்கள் முடித்தமைக்கு 10 புள்ளிகள் வழங்கப்படும். வகுப்பில் மாணவர்களின் ஈடுபாட்டிற்கு 5 புள்ளிகள் வழங்கப்படும். மொத்தமாக ஒரு வகுப்பிற்கு அதிகபட்சம் 25 புள்ளிகள் வழங்கப்படும்.
  • பாராட்டுப் புள்ளிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் அவர்களுக்கான பரிசுகளைப் பெறலாம். பாராட்டுப் புள்ளிகளுக்கு ஏற்ற பரிசுகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
world tamil academy

நூறு புள்ளிகள்

இருநூறு புள்ளிகள்

ஐந்நூறு புள்ளிகள்

ஒவ்வொரு நிலையை வெற்றிகரமாக முடித்த பின்பும் மாணவருக்கு கூடுதலாக 50 புள்ளிகள் வழங்கப்படும்.

மாணவர்கள் வகுப்பில் சிறப்பாக பங்கேற்று அதிக அளவில் பாராட்டுப் புள்ளிகளைப் பெற்றுப் பரிசுகளை அள்ள வாழ்த்துக்கள்...