• இனிய தமிழ் கற்போம்.!
 • இணையம் வழி..!
 • இல்லத்தில் இருந்தே...!

இணையம் வழியாக...! உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழ் மொழியைத் திறம்பட கொண்டு செல்வதே உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தின் நோக்கமாகும்.

இணையம் வழியாக ..!
 • உலகத்தமிழ்க் கல்விக்கழகம் ஸ்கைப் (Skype) என்னும் மென்பொருள் உதவியுடன் ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் தம் தமிழ் பணியை செவ்வனே ஆற்றி வருகிறது.
 • தற்சமயம் இளைய தலைமுறையினருக்கு அதாவது குழந்தைகளுக்கானத் தமிழ் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
 • 'மொழியின் எல்லையே சிந்தையின் எல்லை' என்பதற்கு இணங்க பேசுதல், எழுதுதல், வாசித்தல் என்ற மொழியின் அடிப்படை நிலைகளைக் கருத்தில் கொண்டு தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது.
 • அயலகத்தில் வாழும் குழந்தைகளின் பிறமொழிச் சூழலைப் புரிந்துப் பொறுமையாகவும் இனிமையாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
உலகத்தமிழ்க் கல்விக்கழகக் கல்வி முறை..!
 • பாடத்திட்டங்கள் மழலைக் கல்வி முதல் ஏழாம் நிலை வரை எளிய எட்டு நிலைகளாக பகுக்கப்பட்டுள்ளது.
 • மேலும் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க தமிழ்நாட்டின் சமச்சீர் கல்விப் பாடங்களும், அயலகத் தமிழ் பாடங்களும் நடத்தப்படும்.
 • கற்பதற்குத் துணை செய்யும் காணொளிப் பாடங்கள் (Video Lessons), படக்காட்சி வில்லைகள் (Teaching Tools), பணித்தாள்கள் (Worksheets), அச்சுப்பிரதிகள் (Printables), இணைய வழித் தேர்வுகள் (Online Quiz) போன்ற வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தரவுகள் அனைத்தும் அனுபவமும் திறமையும் வாய்ந்த உலகத்தமிழ்க் கல்விக்கழக ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவை.
 • மாணவர்களின் தமிழ் திறனை மேம்படுத்தும் விதமாக உலகத்தமிழ்க் கல்விக்கழக ஆசிரியர்களுடன் பிற கல்லூரிப் பேராசிரியர்களின் பங்களிப்போடு சிறப்பு வகுப்புகளும் (Special Classes), சிறப்பு நிகழ்வுகளும் (Special Events) நடத்தப்படும்.
 • அத்துடன் மாதத்தேர்வுகளும் ஆண்டுத்தேர்வுகளும் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்படுகின்றன.