வழிமுறைகள்

பெற்றோர்களுக்கான வழிமுறைகள்

 • ஆசிரியர்கள் அனுப்பும் நினைவு மின்னஞ்சல்களைப் பார்வையிட்டு குறித்த நேரத்தில் மாணவர்களைப் பங்கேற்க செய்யவும்.
 • வகுப்பு நடைபெறும் முன் இணையத் தொடர்பு, இணைய வேகம் போன்றவற்றை சரிபார்க்கவும்.
 • வழக்கமான வகுப்பினைத் தவறவிடும் போது அதை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும். அந்த மின்னஞ்சலில் மாற்று வகுப்பு குறித்த தகவலையும் தெரிவிக்கவும்.
 • அனுப்பப்படும் வீட்டுப்பாடங்களைத் தரவிறக்கம் செய்து இணையவழித் தேர்வுகளுக்கான உரலியை (Link) மாணவர்களுக்கு வழங்கவும். மாணவர்கள் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கு ஊக்குவிக்கவும்.
 • மாதத்தேர்வு மற்றும் ஆண்டுத்தேர்வில் மாணவர்களின் செயல்பாடு மற்றும் நிலைகள் குறித்து ஆசிரியருடன் உரையாடவும்.
 • மாணவர்களுக்கான வழிமுறைகளை எடுத்துரைத்து அதன்படி குழந்தைகளை வழி நடத்தவும்.

மாணவர்களுக்கான வழிமுறைகள்

 • மாணவர்கள் தமிழ் வகுப்பிற்குரிய நாள் மற்றும் நேரத்தை தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.
 • வகுப்பிற்கு வருமுன் எழுதுவதற்கான கருவிகள், சென்ற வகுப்பிற்கான வீட்டுப்பாடங்கள் போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்கவும்.
 • வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, கணினி மென்பொருள்கள் மற்றும் இணைய இணைப்பில் ஏதேனும் தடங்கல் ஏற்படின் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் தெரிவிக்கவும்.
 • ஆசிரியர் மற்றும் பெற்றோருடன் இயன்ற வரையில் தமிழில் பேச முயசிக்கவும்.
 • வகுப்பில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளவும்

ஆசிரியர்களுக்கான வழிமுறைகள்

 • பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் நாளில், வாரம் ஒரு வகுப்பு எடுத்தல்.
 • ஐம்பது நிமிடங்கள் கொண்டது ஒரு வகுப்பாகும். ஐம்பது நிமிடங்களில் மூன்று படிநிலைகளாகத் தமிழ் வகுப்பு எடுத்தல்.
 • முதல் பத்து நிமிடங்கள் :- மாணவர்களை உற்சாகப்படுத்துதல், வீட்டுப்பாடங்களைச் சரிபார்த்தல், சென்ற வகுப்புப் பாடங்களை மீள்பார்வை செய்தல்.

  முப்பது நிமிடங்கள் :- புதிய பாடங்களை செம்மையாக நடத்துதல், மாணவர்களின் எழுத்திலும் உச்சரிப்பிலும் வாசித்தலிலும் கவனம் செலுத்துதல். நடத்தப்பட்ட பாடங்களில் வினா எழுப்புதல், மாணவனின் ஐயங்களைப் போக்குதல்.

  இறுதி பத்து நிமிடங்கள் :- மாணவர்களின் தனித்திறன் மற்றும் வாழ்வியல் பாடங்களில் கவனம் செலுத்துதல். கதைகள், பாடல்களுடன் பழமொழி, விடுகதை, போன்றவற்றையும் கற்றுத்தருதல்.

 • ஆசிரியர்கள் தமிழ் வகுப்பிற்குரிய நேரத்தில் மாணவனை ஸ்கைப் (Skype) வழியாக அழைத்தல். அழைப்பினை ஏற்காத போது தொலைபேசி, கைபேசி அல்லது கட்செவி(Whatsapp) வழியாகத் தொடர்பு கொள்ளுதல்.
 • மாணவர்களின் வருகை மற்றும் மதிப்பீட்டுப் புள்ளிகளை ஆசிரியர் வழங்குதல். வகுப்பு நடைபெறும் போது ஏற்படும் தடங்கல்களை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை ஆசிரியர் கண்டறிதல். மாணவர்களின் நிலை குறித்து பெற்றோரிடம் ஆசிரியர் உரையாடுதல்.