இருமொழிக் கல்வி முத்திரை என்பது இரு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்களது மாநிலக் கல்வித்துறை வழங்கும் முத்திரை ஆகும்.
இந்த முத்திரையைப் பெறுவதற்கு, மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளில், இடைநிலைப் பிரிவில் உயர் வகுப்பில் (Intermediate High) தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தத் தேர்வை 9 - 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள் எழுதலாம். இந்தத் தேர்விற்குக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பயிற்சித் தேவைப்படும்.
தமிழ் மொழிக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு தேர்வுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலத்தைப் பொறுத்து, அதற்குரியத் தேர்வைத் (Exam) தேர்ந்தெடுக்க வேண்டும்.
சில மாநிலங்களில் இந்த இருமொழி முத்திரைத் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆகையால், அவர்கள் The Global Seal முத்திரைக்கு விண்ணப்பிக்கலாம்.
உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தில் நான்காவது பாட நிலையைத் தாண்டிய மாணவர்கள் மற்றும் 6 - 9 ஆம் வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களது தமிழ் ஆசிரியர்களால், இத்தேர்விற்கான தனி வகுப்புகள் நடத்தப்படும்.