இணையவழி தமிழ் வகுப்பு ஸ்கைப் ( SKYPE ) என்ற மென்பொருள் வழியாக நடத்தப்படுகின்றது. இது இலவச மென்பொருளாகும். ஆசிரியர்கள் தமிழ் வகுப்பிற்குரிய நேரத்தில் மாணவனை ஸ்கைப் ( SKYPE ) வழியாக அழைப்பார்கள். மாணவன் அழைப்பினை ஏற்காத போது தொலைபேசி, கைபேசி அல்லது கட்செவியின் ( Whatsapp ) மூலம் பெற்றோருக்குத் தெரியப்படுத்துவார்கள். ஸ்கைபி ( SKYPE ) மென்பொருள் செயல்படாத நாடுகளில் மாற்று வழிகள் மேற்கொள்ளப்படும்.
அவையாவன: அடோபி அக்ரோபட் ( ADOBE ACROBAT ), வெபெக்ஸ் - ( WEBEX ) உள்ளிட்ட மென்பொருள்கள் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்படும்.
பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் நாளில், வாரம் ஒரு வகுப்பு நடைபெறும். ஐம்பது நிமிடங்கள் கொண்டது ஒரு வகுப்பாகும். ஐம்பது நிமிடங்களில் மூன்று படிநிலைகளாகத் தமிழ் வகுப்பு நடைபெறும்.
மாணவர்களை உற்சாகப்படுத்துதல், வீட்டுப்பாடங்களைச் சரிபார்த்தல், சென்ற வகுப்புப் பாடங்களை மீள்பார்வை செய்தல்.
புதிய பாடங்களை செம்மையாக நடத்துதல், மாணவர்களின் எழுத்திலும் உச்சரிப்பிலும் வாசித்தலிலும் கவனம் செலுத்துதல். நடத்தப்பட்ட பாடங்களில் வினா எழுப்புதல், மாணவனின் ஐயங்களைப் போக்குதல்.
மாணவர்களின் தனித்திறன் மற்றும் வாழ்வியல் பாடங்களில் கவனம் செலுத்துதல். கதைகள், பாடல்களுடன் பழமொழி, விடுகதை, போன்றவற்றையும் கற்றுத்தருதல்.
புதிய இணைய வழி தமிழ் வகுப்பில் பதிவு செய்ய விரும்புகிறவர்கள் இங்கே..
சொடுக்கவும்நேரடி இணையவழி வகுப்புக்கான கட்டண விபரங்கள் பற்றி அறிய இங்கே..
சொடுக்கவும்