"எனது மகள் ரோசனா பிரபாகரன் கடந்த 7 மாதங்களாக திரு.மா.நடராஐன் அவர்களிடம் தமிழ் கற்றுக்கொண்டு வருகிறாள். முதலில் வாரவிடுமுறையில் காலையிலேயே எழுந்து தமிழ் கற்க அயத்தமாகிவிடுவதை கண்டு வியந்தேன். அஃது, அவள் ஆசிரியரின்பால் கொண்ட அன்பும், அவரின் கனிவான, நேர்த்தியான பாடம் நடத்தும் முறையாலென பிறகு உணர்ந்தேன். தமிழ் கல்வி கழகத்தின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட பாடதிட்டங்கள், செயல்முறைகள் மிகச் சிறப்பாக உள்ளது. அயல்நாடு வாழ் தமிழ் குழந்தைகள் சிறந்த முறையில் தமிழ் கற்க உறுதுணையாக உள்ளது. மேலும், குழந்தைகளுக்கு வாழ்வியல், அறநெறி சார்ந்த கல்வியை மிக எளிய முறையில் விளங்கிக்கொள்ளுமாறு கற்று தருவதால், வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், அமைதியும் பெற்று வாழ்வார்கள். தமிழ் வளர்க்கும் தமிழ் கல்வி கழகத்தின் பணி வாழ்க, மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்,"