உலகத்தமிழ்க் கலவிக்கழக மாணவர்களுக்கான ஒரு புதிய முயற்சியாகக் காகிதக்கலை பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க உலகத்தமிழ்க் கலவிக்கழக மாணவர்களில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த வகுப்பில் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் தங்கள் வீட்டை அலங்கரிக்கும் விதமாக கிருஸ்துமஸ் மரம் செய்யக் காகிதக் கலைப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் சிறப்பான பங்களிப்பின் வாயிலாக காகிதத்தில் கிருஸ்துமஸ் மரம் செய்தனர். அத்துடன் ஒருவருக்கொருவர் தங்களின் கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை சக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழில் தெரிவித்துக் கொண்டனர். உலகத்தமிழ்க் கல்விக்கழக வழிகாட்டுதலின்படியும் பெற்றோரின் உதவியுடனும் பயிற்சி வகுப்பிற்குத் தேவையான பொருட்களை மாணவர்கள் முன்னேற்பாடுடன் கொண்டு வந்து வகுப்பு சிறப்பாக நடைபெற வைத்தது அடுத்து வரும் புதிய முயற்சிகளுக்கு முன்மாதிரியாக அமைந்தது.