உலகத்தமிழ்க் கல்விக்கழக மாணவர்களுக்கு அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் முதுகலை மாணவர்களால் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அமேரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து எம் தமிழ்க் கல்விக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ் மொழி உச்சரிப்புகள், கதைகள், பழமொழி, விடுகதை தமிழரின் புழங்கு பொருட்கள் போன்றவை குறித்த கலந்துரையாடலாக இவ்வகுப்பு அமைந்தது. கல்லூரி மாணவர்களும் கழக மாணவர்களும் கலந்து கொண்ட இவ்வகுப்பில் பேராசிரியர்களின் பங்கும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது..