உலகில் மனிதன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு உண்டான மொழிகள் பல உள்ளன. ஒரு மனிதன் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொள்வதில் எழுதுதல் பேசுதல் இவ்விரண்டும் அடக்கம். எழுதுதலில் இலக்கணப் பிழையும் பேசுதலில் உச்சரிப்பு பிழையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தவகையில் தமிழ் மொழி உச்சரிப்பு குறித்த சிறப்புப் பயிற்சி கடந்த ஆண்டு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பினை பேராசிரியர் திருமதி ந.அருள்மொழி m.a அவர்கள் நடத்தினார். இப்பயிற்சி வகுப்பில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். .