இணையம் வழியாக...! உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் குழந்தைகளுக்கும் ஆர்வலர்களுக்கும் தமிழ் மொழியைத் திறம்பட கொண்டு செல்வதே உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தின் நோக்கமாகும். மேலும் அறிய ⇛
Desktop Computer (or) Laptop (Tablet - Not Recommended)
Internet Connection (High Speed - Recommended)
Webcam, Headphone and Mic (Separate Headphone with Mic - Recommended)
Skype Software (Latest - Recommended)
Browser (Chrome - Recommended)
Skype Account
Mail Account (Google Mail - Recommended)
உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தை பற்றி..
உலகத்தமிழ்க் கல்விக்கழகம் ஸ்கைப் (Skype) என்னும் மென்பொருள் உதவியுடன் ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் தம் தமிழ் பணியை செவ்வனே ஆற்றி வருகிறது.
தற்சமயம் இளைய தலைமுறையினருக்கு அதாவது குழந்தைகளுக்கானத் தமிழ் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
'மொழியின் எல்லையே சிந்தையின் எல்லை' என்பதற்கு இணங்க பேசுதல், எழுதுதல், வாசித்தல் என்ற மொழியின் அடிப்படை நிலைகளைக் கருத்தில் கொண்டு தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது.
அயலகத்தில் வாழும் குழந்தைகளின் பிறமொழிச் சூழலைப் புரிந்துப் பொறுமையாகவும் இனிமையாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
உலகத்தமிழ்க் கல்விக்கழகம் கற்பிக்கும் முறைகள்
பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் நாளில், வாரம் ஒரு வகுப்பு நடைபெறும். ஐம்பது நிமிடங்கள் கொண்டது ஒரு வகுப்பாகும். ஐம்பது நிமிடங்களில் மூன்று படிநிலைகளாகத் தமிழ் வகுப்பு நடைபெறும்.
முதல் பத்து நிமிடங்கள் :- மாணவர்களை உற்சாகப்படுத்துதல், வீட்டுப்பாடங்களைச் சரிபார்த்தல், சென்ற வகுப்புப் பாடங்களை மீள்பார்வை செய்தல்.
முப்பது நிமிடங்கள் :- புதிய பாடங்களை செம்மையாக நடத்துதல், மாணவர்களின் எழுத்திலும் உச்சரிப்பிலும் வாசித்தலிலும் கவனம் செலுத்துதல். நடத்தப்பட்ட பாடங்களில் வினா எழுப்புதல், மாணவனின் ஐயங்களைப் போக்குதல்.
இறுதி பத்து நிமிடங்கள் :- மாணவர்களின் தனித்திறன் மற்றும் வாழ்வியல் பாடங்களில் கவனம் செலுத்துதல். கதைகள், பாடல்களுடன் பழமொழி, விடுகதை, போன்றவற்றையும் கற்றுத்தருதல்.
உலகத்தமிழ்க் கல்விக்கழகக் கல்வி முறை..!
பாடத்திட்டங்கள் மழலைக் கல்வி முதல் ஏழாம் நிலை வரை எளிய எட்டு நிலைகளாக பகுக்கப்பட்டுள்ளது.
மேலும் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க தமிழ்நாட்டின் சமச்சீர் கல்விப் பாடங்களும், அயலகத் தமிழ் பாடங்களும் நடத்தப்படும்.
கற்பதற்குத் துணை செய்யும் காணொளிப் பாடங்கள் (Video Lessons), படக்காட்சி வில்லைகள் (Teaching Tools), பணித்தாள்கள் (Worksheets), அச்சுப்பிரதிகள் (Printables), இணைய வழித் தேர்வுகள் (Online Quiz) போன்ற வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தரவுகள் அனைத்தும் அனுபவமும் திறமையும் வாய்ந்த உலகத்தமிழ்க் கல்விக்கழக ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவை.
மாணவர்களின் தமிழ் திறனை மேம்படுத்தும் விதமாக உலகத்தமிழ்க் கல்விக்கழக ஆசிரியர்களுடன் பிற கல்லூரிப் பேராசிரியர்களின் பங்களிப்போடு சிறப்பு வகுப்புகளும் (Special Classes), சிறப்பு நிகழ்வுகளும் (Special Events) நடத்தப்படும்.
அத்துடன் மாதத்தேர்வுகளும் ஆண்டுத்தேர்வுகளும் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்படுகின்றன.
இணைய வழி தமிழ் வகுப்பிற்கான கட்டண விபரங்கள்
வாரம் ஒரு வகுப்பு வீதம் மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து வகுப்புகள் நடைபெறும்.
ஒரு மாணவனுக்கு மாதத்திற்கு $30 USD அல்லது அதற்கு இணையான கட்டணம்.
கட்டணவிபரங்கள் அடங்கிய மின்னஞ்சல் மாதத்தின் முதல் வாரத்தில் அனுப்பப்படும்.
கட்டண சலுகை
ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் பங்கேற்பின் அவர்களுக்குக் கட்டணத்திலிருந்து 16% விலக்கு அளிக்கப்படும், மேலும் ஒரு மாணவன் வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் பங்கேற்பின் அவர்களுக்கும் அச்சலுகை வழங்கப்படும்.
மாணவர்கள் பிற மாணவர்களை அறிமுகப்படுத்துவதின் மூலமாகவும் இரண்டு மாதத்திற்கு $10 USD வீதம் கட்டண சலுகை அளிக்கப்படும்.
Student Referral Discount : $10 USD per Month for 2 Months to both New Student and Existing Student.